பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம்!

தற்போது நிலவிவரும் மழை உடனான சீரற்ற வானிலை காரணமாகப் பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்பது குறித்த தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பான வழிகாட்டுதல்களையும் அறிவுறுத்தல்களையும் கல்வி அமைச்சு மாகாண அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது.

 

இதற்கமைய, மத்திய மாகாணத்தின் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில கல்வி வலயங்களுக்கு உட்பட்ட 26 பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *