அடைமழையிலும் டயகம மக்கள் போராட்டம்!

டயகம ஈஸ்ட் வீதியை உடன் புனரமைத்துத் தருமாறு கோரி, பிரதேச மக்கள் இன்று (26) கன மழைக்கு மத்தியிலும் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

டித்வா புயலால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாகவும், அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலும் டயகம ஈஸ்ட் செல்லும் வீதியின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளதாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

 

குறித்த வீதி மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், தற்போது முச்சக்கர வண்டிகள் மாத்திரமே பயணிக்கக்கூடிய நிலை காணப்படுவதாகவும், வீதியில் அடிக்கடி விபத்துகள் இடம்பெற்று பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

 

குறிப்பாக, நிறைமாதக் கர்ப்பிணிகள் மற்றும் தீவிர நோயாளிகளை இந்த வீதியூடாகக் கொண்டு செல்லும்போது கடுமையான அசௌகரியங்களும் உயிராபத்தும் ஏற்படக்கூடும் எனவும் அவர்கள் கவலை வெளியிட்டனர்.

 

பொதுமக்கள் , எதிர்ப்புப் பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *