மாத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு புதிய சர்வதேச விமான சேவை!

உஸ்பெகிஸ்தானின் Centrum Air விமான நிறுவனம், தாஷ்கண்ட் மற்றும் மாத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு இடையிலான நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது. இதன் முதலாவது விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது.

இந்த விமான சேவை, 2027 மார்ச் மாத இறுதி வரை வாரத்திற்கு இரண்டு தடவைகள், புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த புதிய விமானப் பாதையின் ஊடாக இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதுடன், மத்திய ஆசிய நாடுகளிலிருந்து அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், இலங்கைக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையிலான பயண மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *