ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் மல்லியப்பு பகுதியில் இன்று (30) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இன்று காலை சுமார் 8.30 மணியளவில் ஒரே திசையில் பயணித்த நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பு திசையிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதனைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிளுக்குப் பின்னால் வந்த வேன் மற்றும் அதற்குப் பின்னால் பயணித்த மற்றுமொரு முச்சக்கர வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன.
முன்னால் பயணித்த முச்சக்கர வண்டியின் சாரதியின் கவனக்குறைவான வாகனச் செலுத்துதலே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

