மாவடிப்பள்ளி மஜினாவுக்கு ‘இளங்கலைஞர்’ அரச விருது வழங்கி கௌரவிப்பு!

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படும் 2026ஆம் ஆண்டுக்கான ‘இளங்கலைஞர்’ அரச விருது, இலக்கியப் பிரிவில் மாவடிப்பள்ளியைச் சேர்ந்த மஜினாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு Golden River ஹோட்டலில் நடைபெற்ற கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் விருது வழங்கும் நிகழ்வில் இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

கிழக்கு மாகாண ஆளுநர் டாக்டர் ஜயந்த லால் ரத்னசேகர, கல்வி அமைச்சின் செயலாளர் என். மணிவண்ணன், பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முன்னிலையில் இந்த விருது வழங்கப்பட்டது.

இந்தியாவின் ‘மணிமகுடம்’ சஞ்சிகையின் இணையாசிரியராகவும், ‘துணிந்தெழு’ சஞ்சிகையின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் பணியாற்றிவரும் மஜினா, கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம், கட்டுரை மற்றும் பெண் ஆளுமைகளுடனான நேர்காணல்கள் உள்ளிட்ட பல்வேறு இலக்கியப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.

குறிப்பாக, ‘தினகரன்’ பத்திரிகையின் ‘செந்தூரம்’ பக்கத்தின் ஊடாக இதுவரை 59க்கும் மேற்பட்ட சர்வதேசப் பெண் ஆளுமைகளின் நேர்காணல்களை வெளியிட்டுள்ளார்.

மேலும், ‘கலைஞர் சுவதம் விருது’, ‘வனிதாபிமான’ போட்டியில் மாகாண முதலிடம், சிறந்த கட்டுரை எழுத்தாளர் விருது, சிறந்த இணையாசிரியர் விருது, ‘Young Writer Excellency Award’ மற்றும் இந்தியாவின் ‘வெற்றித் தமிழினி விருது’ உள்ளிட்ட பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார்.

இளம் வயதிலேயே இலக்கியத் துறையில் ஆற்றிவரும் பங்களிப்புகளுக்காக அரச மட்டத்தில் வழங்கப்பட்டுள்ள இந்த அங்கீகாரம், மாவடிப்பள்ளி பிரதேசத்திற்கும் அம்பாறை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

இதனையடுத்து, கலை இலக்கியத்துறையினர் மற்றும் பலரும் மஜினாவுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *