மேஷம்: உத்தியோகத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும். குடும்ப உறவுகளில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரிஷபம்: கடன் பிரச்சினைகள் தீரும். பணவரவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கோபத்தைத் தவிர்ப்பது நல்லது.
மிதுனம்: தொழில், வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வேலைப்பளு கூடும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படலாம்.
கடகம்: எதிர்பார்த்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். தொழில் தொடர்பான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நிதானம் அவசியம்.
சிம்மம்: திடீர் கோபத்தைத் தவிர்க்கவும். தெளிவான சிந்தனையால் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். முக்கிய முடிவுகள் சாதகமாக அமையும்.
கன்னி: புதிய நட்புகள் மற்றும் தொடர்புகள் மூலம் நன்மைகள் கிடைக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் உருவாகும். மதிப்பும் மரியாதையும் உயரும்.
துலாம்: உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். சக பணியாளர்களின் ஆதரவு கிடைப்பதுடன், பழைய பணிகளுக்கும் பாராட்டு கிடைக்கும்.
விருச்சிகம்: திருமணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். குடும்பத்தில் வருமானம் அதிகரிக்கும். தம்பதியரிடையே ஒற்றுமை மேம்படும்.
தனுசு: திருமண முயற்சிகள் கைகூடும். குடும்பத்தினர் மூலம் பொருளாதார நன்மைகள் கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
மகரம்: பணவரவு அதிகரிக்கும். தொழில் போட்டிகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். நீண்டகாலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
கும்பம்: திருமணத் தடைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் இடம்பெறும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
மீனம்: பணவரவு அதிகரிக்கும். காரியத் தடைகள் நீங்கி செல்வாக்கு உயரும். வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முயற்சிகள் வெற்றியளிக்கும்.

