மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

ஆரம்ப பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற ஒரு முச்சக்கரவண்டி வாகனம் 10 அடி ஆழமுள்ள செங்குத்தான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதில் பயணித்த பாடசாலை மாணவர்கள் 4 பேர் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று புதன்கிழமை (4) பிற்பகல் சுமார் 2.30 மணியளவில், ஹட்டன் – புலியாவத்த பிரதான வீதியில் உள்ள பி.டபிள்யூ. பிரதேசத்தில் இடம்பெற்றது.

புலியாவத்த பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை முடித்து வந்த நான்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி எதிர்த் திசையிலிருந்து அதிவேகமாக வந்துகொண்டிருந்த ஒரு முச்சக்கரவண்டிக்கு இடமளிக்க முயன்றபோது, குறித்த வாகனம் கவிழ்ந்து செங்குத்தான பள்ளத்தில் விழுந்ததாக முச்சக்கரவண்டியின் சாரதி தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திவரும் நோர்வூட் பொலிஸார், புலியாவத்த தமிழ் ஆரம்ப பாடசாலை ஒன்றில் 3 முதல் 4ஆம் வகுப்புகளில் பயிலும் 3 மாணவிகள் மற்றும் ஒரு மாணவன் என 4 மாணவர்களே இந்த விபத்தில் காயமடைந்ததாகத் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *