4ஆவது இளையோர் விளையாட்டு விழா: பெண்கள் பெட்மின்டனில் நெத்மிக்கு ஒரு வெற்றி!

செனகல் தேசத்தின் தலைநகர் டாக்கரில் நடைபெற்றுவரும் 4ஆவது இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக பங்குபற்றும் ஐவரில் இதுவரை மூவர் மாத்திரமே களம் இறங்கியுள்ளனர்.

அவர்களில் எச் குழுவில் பெண்களுக்கான பெட்மின்டன் ஒற்றையர் போட்டியில் பங்குபற்றிய நெத்மி ரத்நாயக்க தான் விளையாடிய 3 போட்டிகளில் ஒன்றில் மாத்திரம் வெற்றிபெற்று திருப்தி அடைந்தார்.

தனது ஆரம்பப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை யுஸுனோ வட்டனாபெயிடம் 2 நேர் செட்களில் தோல்வி அடைந்த நெத்மி, இரண்டாவது போட்டியில் மொரிஷியஸ் வீராங்கனை எல்சா ஹவ் ஹொங்கை 2 நேர் செட்களில் நெத்மி வெற்றிகொண்டு வரலாறு படைத்தார்.

எனினும் நேற்று இரவு நடைபெற்ற இந்தோனேசிய வீராங்கனை அயுடிஸ் மிப்தாக்குல் புத்திரிக்கு எதிரான தனது கடைசிப் போட்டியில் கடும் சவால் விடுத்து விளையாடிய நெத்மி துரதிர்ஷ்டவசமாக 1 – 2 என்ற செட்கள் (18 – 21, 22 – 20, 15 – 21) வித்தியாசத்தில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *