முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் வழக்கு விசாரணை நவம்பர் 10 ஆம் திகதி நடத்தப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ராஜகிரிய பகுதியில் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்துத் தொடர்பில் சாட்சியங்களை மறைத்தமை தொடர்பாகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று ( 04.11.2026) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் அழைக்கப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்கவிற்கு எதிராக 16 குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், சந்தீப் சம்பத் குணவர்தன என்ற இளைஞர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளில் அமைச்சரின் சொகுசு வாகனம் மோதியதில் பலத்த காயங்களை ஏற்படுத்தியமை விபத்தின் பின்னர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றமை மற்றும் அது தொடர்பாக பொய் சாட்சியங்களை உருவாக்கியமை என்பன தொடர்பில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

