பராகுவே ஜனாதிபதி சாண்டியாகோ பெனா இராஜினாமா!

டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனமான யுனோவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், பராகுவே ஜனாதிபதி சாண்டியாகோ பெனா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

யுனோ நிறுவனத்தின் வீழ்ச்சியால் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் தங்களது கணக்குகளை அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு எதிராகப் பதவி நீக்கக் கோரிக்கைகளும் போராட்டங்களும் வலுப்பெற்றன.

மேலும், எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், நாட்டின் ஸ்திரத்தன்மை, சமூக அமைதி மற்றும் ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாக்கும் நோக்கில் பதவி விலகுவதாக ஜனாதிபதி காணொளி ஊடாக அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, துணை ஜனாதிபதி பெட்ரோ அல்லியானா ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *