உச்ச நீதிமன்றம் செல்லும் தொழிலதிபர் சுலக்சன்!

மத்திய அரசின் சூழ்ச்சியே யாழ் மாநாகரில் எமது வேட்பு மனு  நிராகரிப்புக்கு காரணம் என சுட்டிக்கட்டியுள்ள தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்‌ஷன் தலைமையிலான சுயேச்சைக் குழு
வரும் வெள்ளியன்று குறித்த தீர்மானத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் அவர் கூறுகையில்,

இதில் யாழ். மாநகரின் வேட்புமனு பெண் வேட்பாளரது உறுதியுரை குறித்த விடயம் தொடரிலான சர்ச்சையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் சட்டத்தின் பிரகாரமே வேட்புமனுவை சமர்ப்பித்திருந்தோம்.

அதன்படி யாழ். மாநகரில் எமது வேட்புமனு  நிராகரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்விடயம் குதித்து நாம் சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை செய்துள்ளோம்.

 தேர்தல் திணைக்களத்தின் இந்த அறிவிப்புக்கு எதிராக நாம் நியாயம் கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யவுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *