முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (12) காலை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவானினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதன்போது, குறித்த முறைப்பாட்டின் பிரதிவாதியாக விமல் வீரவன்ச பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவர் சார்பில் அவரது சட்டத்தரணிகள் இன்று விடயங்களை முன்வைக்கவுள்ளனர்.
குறித்த வழக்கு நடவடிக்கைகளுக்காகவே முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

