மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானை தாக்கத்திலிருந்து பொது மக்களை பாதுகாப்பதற்காக 7 விசேட செயலணி அலுவலகங்கள் அரசாங்கத்தினால், அமைக்கப்பட்டுள்ளதுடன், 96 கிலோ மீற்றர் யானை வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவருமான கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
தொர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
எமது நாட்டில் யானை மனித மோதல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால் மனித உயிர் மற்றும் சொத்துக்களுக்கு பாதிப்பும் நட்டமும் ஏற்பட்டு வருகின்றது.
இதனை தடுப்பதற்காக ஒரு லட்சம் யானை வேலிகள் அமைக்கப்பட உள்ளதுடன் காட்டு யானை தாக்கத்தினால் அதிகம் பாதிக்கப்படுகின்ற பகுதிகளில் காட்டு யானை உட்புவதை தடுக்கும் விசேட செயலணி அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
தொடர்ச்சியாக மனித உயிர்கள் சொத்து இழப்புக்கள் ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது இதனை தடுப்பதற்காக அரசாங்கம் அரச திணைக்களங்கள் ஊடாக விசேட திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்க உள்ளது.

