இலங்கை பொலிஸாருக்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய சீருடையில், கனேடிய பொலிஸாரின் சீருடையைப் போன்ற சாம்பல் நிறச் சட்டையும் நீல நிறக் கால்சட்டையும் இடம்பெறக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்பிரிவு வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்தியின்படி, 2027 ஜூன் மாதம் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள புதிய சீருடைக்கான பல்வேறு வடிவமைப்புகளில் இதுவும் ஒன்றாகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்தபோது, நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட புதிய பொலிஸ் சீருடையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்திருந்தார்.
இலங்கையின் காலநிலைக்கு ஏற்ற வகையில் இந்தச் சீருடை வடிவமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, தற்போதைய காக்கி நிறச் சீருடை காலனித்துவ காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அதன் தடிமனான துணி இலங்கையின் வெப்பமான காலநிலைக்கு ஏற்றதாக இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

