சாந்தபுரம் கிராம பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 08.11.2026 அன்று சாந்தபுரம் கிராமத்தில் இடம்பெற்ற கூட்டு பாலியல் வன்கொடுமைச் சம்பவத்திற்குப் போதைப்பொருள் பாவனையே காரணம் எனப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும், கிராமத்தில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தவும், இவ்வாறான குற்றச்செயல்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதன்போது, தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரனிடம் கையளித்தனர்.

