ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி, ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு மத்திய கிழக்கு நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
“தற்போது ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா கட்டுப்படுத்தி வைத்திருப்பதன் மூலம் அவர்கள் அனைவரும் பயனடைகிறார்கள். ஈரானிய ஆட்சியால் தங்களைத் தாக்க முடியாது என்ற சூழல் நிலவுவது அவர்களுக்குச் சாதகமாகவே உள்ளது,” என்று ஊடகமொன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.
வளைகுடா நாட்டு நட்பு நாடுகள், ஜனாதிபதி ட்ரம்பிற்குத் தொலைபேசி வாயிலாக அழைத்து, “தயவுசெய்து இதைச் செய்யாதீர்கள்” என்று கேட்டுக்கொள்வது குறித்து நிக்கி ஹேலி வருத்தம் தெரிவித்தார்.

