கடுகன்னாவ பகுதியில் கொழும்பு–கண்டி வீதி மூடல்!

பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான வீதி கீழ் கடுகன்னாவ பிரதேசத்தில் இன்று (23) இரவு 11 மணி முதல் நாளை (24) காலை 6 மணி வரை முழுமையாக மூடப்படவுள்ளது.

ஆபத்தான நிலையில் உள்ள பாறைகளைப் பாதுகாப்பாக அகற்றும் பணிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பராமரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட உரிய அதிகாரிகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர செயற்பாட்டு மையத்தின் ஊடாக அனைத்துத் தரப்பினருக்கும் தேவையான அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

எனவே, குறித்த நேரத்தில் கொழும்பு – கண்டி வீதியைப் பயன்படுத்த எதிர்பார்க்கும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் இது குறித்து அவதானம் செலுத்தி, மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *