கிளிநொச்சி குளத்தின் துருசு கதவு திருத்தப் பணிகளுக்காக நீர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இலட்சக்கணக்கான மீன்கள் உயிரிழந்து கரையொதுங்கியுள்ளன.
இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுற்றுச்சூழல் மாசடைந்து சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
குறித்த குளத்திலிருந்தே கிளிநொச்சி நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகிக்கப்படுவதால், குடிநீரின் பாதுகாப்பு குறித்து மக்கள் மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, குடிநீர் பாவனைக்குப் பாதுகாப்பானதா என்பதை உரிய பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தி, மக்களுக்குத் தெளிவான அறிவிப்பை வெளியிடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

