அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் விமானம் ஒன்று கடலில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் நியூ ஆர்லியன்ஸிலிருந்து புளோரிடாவுக்குப் நேற்று மதியம் சென்சூரியன் 210 எனும் சிறிய ரக விமானத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பயணித்தனர்.
விமானம் சுமார் 8இ800 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோதுஇ திடீரென மணிக்கு 322 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் கீழ் இறங்கத் தொடங்கி இறுதியில் கடலில் விழுந்துள்ளது.
புறப்பட்ட 30 நிமிடங்கள் வரை நேராக சென்றுகொண்டிருந்த விமானம் திடீரென மிசிசிப்பியில் உள்ள ஹார்ன் தீவை நோக்கித் திரும்பியது. அதன் பிறகு பிற்பகல் 3:45 மணியளவில் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
விமானத்துடனான தொடர்பை இழந்ததால் கடலோரக் பாதுகாப்பு படை மிசிசிப்பி கடல் வளத்துறை மற்றும் உள்ளூர் முகாமைகள் சம்பவ இடத்தில் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
விமானத்தில் இருந்த ஆறு பேரின் உடல்களும் தேடுதல் நடவடிக்கையின் போது மீட்கப்பட்டதாக அமெரிக்க கடலோர பாதுகாப்பு படை அறிவித்தது.

