பால்சேனை கோவில் வீதியைச் சேர்ந்த 23 வயதுடைய காளிராசா மனோஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதுபற்றி தெரியவருவதாவது
குறித்த பிரதேசத்தைச் கூலி தொழிலாளியான சேர்ந்த ஜெகநாதன் சுஜீவன், காளிராசா மனோஜாவை திருமணம் முடித்து இருவரும் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கூலி தொழிலாளியான கணவர் வேலைக்கு கடலுக்கு சென்று வரும் நிலையில் அவரது மனைவி வீட்டில் தனிமையில் இருந்து வந்துள்ள நிலையில் அங்கு அவளின் உறவினரான இளைஞன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
இதனையறிந்த கணவர் குறித்த இளைஞனை தனது வீட்டுக்கு வரவேண்டாம் என தெரிவித்து கண்டித்துள்ள நிலையில் சம்பவ தினமான நேற்று செவ்வாய்க்கிழமை காலையில் மனைவியிடம் இந்த கள்ளகாதல் தொடர்பாக கேட்டபோது கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இதனை தொடர்ந்;து பொலிஸ் அவசர தொலைபேசி எண் 119 இலக்கத்துக்கு அறிவித்துவிட்டு பொலிஸ் நிலையம் சென்று சரணடைந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதனை தொடர்ந்து குறித்த நபரை கைது செய்ததுடன் சம்பவ இடத்துக்கு தடவியல் பிரிவு பொலிசார் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றதுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க ப்பட்டுள்ளதாகவும் கைது செய்தவரை நீதிமன்றில் இன்று புதன்கிழமை (25) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

