மட்டக்களப்பு மாவட்டம் – கோரளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபையின் 2027ம் ஆண்டுக்கான பாதீடு சமர்ப்பிக்கும் அமர்வு இன்று புதன்கிழமை தவிசாளர் சுதாகரன் தலைமையில் இடம்பெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆளுகைக்குள் இருக்கும் குறித்த சபையின் பாதீடு 09 மேலதிக வாக்குளால் வெற்றியீட்டியது.
சபை சம்பிரதாயங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இன்றைய அமர்வில் பிரதித் தவிசாளர், உறுப்பினர்கள், சபையின் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது சபைத் தவிசாளரினால் 2027ம் ஆண்டுக்கான பாதீடு சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த பாதீட்டுக்கு ஆதரவாக 17 உறுப்பினர்களும், எதிராக 08 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். ஒரு உறுப்பினர் சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை.
இதில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் 10, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 03, சிறிலங்கா முஸ்லீம் கங்கிரஸ் 04 உறுப்பினர்கள் என மொத்தமாக 17 உறுப்பினர்கள் பாதீட்டுக்கு ஆதரவாகவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 04, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 04 என மொத்தமாக 08 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்திருந்தனர்.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் தமது பதவியில் இருந்து விலகியதன் காரணமாக குறித்த அமர்வுக்குக் கலந்துகொள்ளவில்லை.
அந்த அடிப்படையில் கோராளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபையின் 2027க் கான பாதீடு மேலதிக 09 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

