சர்வதேச போட்டிக்கு சம்மாந்துறை மாணவி தகுதி!

சர்வதேச ஆங்கில ஒலிம்பியாட் – 2026 (International English Olympiad – IEO) போட்டியின் முதலாம் சுற்றில் சிறந்த பெறுபேற்றைப் பதிவு செய்த சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி, உலக இறுதிச் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

குறித்த கல்லூரியில் தரம் 7 இருமொழிப் பிரிவில் கல்வி கற்று வரும் எம்.என். அப்தா அஷ்கரியே இச்சாதனைக்குச் சொந்தக்காரர்.

ஆங்கில மொழித் திறனை மதிப்பீடு செய்யும் வகையில் இணையவழியாக நடத்தப்பட்ட முதலாம் சுற்றுத் தேர்வில், ஜூனியர் பிரிவில் பங்கேற்று அதிக மதிப்பெண்களைப் பெற்று அவர் இறுதிச் சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் 2026 டிசம்பர் 27 முதல் 29 ஆம் திகதி வரை மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள உலக இறுதிச் சுற்றில் (World Final 2026) அவர் பங்கேற்கவுள்ளார்.

இதனுடன் இணைந்ததாக சிங்கப்பூர் நகரைச் சுற்றிப் பார்வையிடுவதற்கும் ஒரு நாள் வாய்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவியின் இச்சாதனைக்குப் பாடசாலைச் சமூகத்தினரும் பெற்றோரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *