பேருந்து மீது பாறை வீழ்ந்து ஒருவர் பலி!

ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து மீது, கினிகத்தேனை களுகல பொலிஸ் காவலரணுக்கு அருகில் பாறை விழுந்து விபத்துக்குள்ளானதில் 31 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவரின் மனைவி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *