கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியில் பெருமளவிலான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நாதன் குடியிருப்பு குளக்கரைப் பகுதியில் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒருவரை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, குறித்த நபரிடமிருந்து 2 கிராம் 37 மில்லிகிராம் ஹெரோயின், 1 கிராம் 93 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 22 போதை மாத்திரைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
மேலும், சந்தேகநபரிடமிருந்து ஒரு கையடக்கத் தொலைபேசியும் 700 ரூபாய் பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (29.11.2026) கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம். திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

