எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்க வலியுறுத்தி கண்காட்சி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையைத் தடுக்கும் நோக்கில், போதையற்ற மட்டக்களப்பைக் கட்டியெழுப்புவோம் எனும் நோக்கில் விழிப்புணர்வுக் கண்காட்சி மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் கடந்த (27) திகதி காத்தான்குடி கடற்கரையில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட Jசெயலகம், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச்சபை , சமுதாய சீர்திருத்த திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஹானியல் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் ஒழுங்கமைப்பில்
வாழ்க்கையை தேர்ந்தெடுங்கள் – எதிர்காலத்தை தேர்ந்தெடுங்கள்” எனும் தொனிப்பொருளில்
‘முழு நாடும் ஒன்றாக’ எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சியில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் சமூக மற்றும் சுகாதாரப் பாதிப்புகள் தொடர்பான விளக்கக் காட்சிகள், விழிப்புணர்வு வீதி நாடகம், நடைபவனி மற்றும் போதைப்பொருள் தடுப்பு ஆலோசனைச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் கண்காட்சிப்படுத்தப்பட்டது.

இக்கண்காட்சியில் மத தலைவர்கள், காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லிலாரத்ன, பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் குறுகியகால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பதிகாரியுமான ப. தினேஸ் மற்றும் சமுதாயம்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் எம்.எம். ரசூல்ஷா,மாவட்ட செயலக போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர்

வி. ஜெகன், மற்றும் உயர் அதிகாரிகள் பிரம்ம குமாரிகள் அமைப்பின் பிரதிநிதிகள், மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களின் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *