முள்ளிவாய்க்காலில் நடந்த தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரித்தானியாவிலும் நடைபெற்றது.
பிரித்தானியாவின் – பாராளுமன்ற சதுக்கம், 10 டவ்னிங் வீதியில் குறித்த இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது பிரித்தானியாவில் வசிக்கும் நூறுக்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழர்கள் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 16 வருடத்தினை நினைவுகூர்ந்துள்ளனர்.
அங்கு கூடிய தமிழ் மக்கள், 16 வருடங்களிற்கு முன்னர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் அழிக்கப்பட்ட தங்கள் உறவுகளை நினைவுகூர்ந்து, ஊர்வலம் சென்று, அஞ்சலிகளை செலுத்தியதுடன் இலங்கை அரசாங்கத்தை கண்டித்து கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.