முள்ளிவாய்க்காலில் கண்ணீர் மல்க நினைவேந்தல் நிகழ்வு

கடந்த 2009ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு நாளில் இன அளிப்பின் மூலம் முள்ளிவாய்க்கால் பகுதியில் கொத்துக் கொத்தாக செத்து மடிந்த உறவுகளின் நினைவு கூறல் நிகழ்வு இடம்பெற்றது.

 

2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி ஈழ விடுதலை வேண்டி மூன்று தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட / முடிவுறுத்தப்பட்ட தினம், தமிழினம் எதிர்கொண்ட பேரழிவுகளின் நினைவு நாள்,  தமிழின அழிப்பு நாள் என்பவற்றை முன்னிறுத்தி  மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகத்திலும் தமிழர் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் ஆண்டுதோறும் நினைவுகூறப்பட்டு வருகின்றது.

 

அந்த வகையில் இன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் கண்ணுக்கு எட்டிய தொலைவில் கண்ணீர் மல்க மக்கள் வெள்ளம் அலை கண்ணீரால் முள்ளிவாய்க்கால் பகுதி நனைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *