கழிவு நீர் வாய்க்கால் துப்பரவுத் திட்டம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு

உலக உணவுத் திட்டமும் சமூக அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு ஆகியன இணைந்து கிளிநொச்சி மாவட்டத்தில் ஆறு  வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றன.

37.5 மில்லியன் ரூபா செலவில் மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலகத்தில் இரண்டு திட்டங்களும் கரைச்சி பிரதேச செயலகத்தில் நான்கு திட்டங்களாக மொத்தமாக ஆறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கண்டாவளை பிரதேச செயலகத்தின் பிரமந்தனாறு கிராமத்தில் கழிவு நீர் வாய்க்கால் துப்பரவுத் திட்டம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பிரமந்தனாறு கிராமத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் (காணி) நளாயினி இன்பராஜ், உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்கான திட்ட பொறியியலாளர் சந்திர திலக ஆகியோர் கலந்து கொண்டு குறித்த திட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர்.

குறித்த நிகழ்வில் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

90 பயனாளிகளை உள்ளடக்கிய மனிதவலுவினைக்கொண்டு குறித்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த வேலைத்திட்டம் மூலம் கிராமத்தின் கழிவு வாய்க்கால், குளங்கள் என்பன துப்பரவு மற்றும் புனரமைப்பு செய்வதன் ஊடாக விவசாயம் முன்னேற்றமடைவதுடன் பயனாளிகளான குறித்த கிராம மக்களுக்கு குறித்த வேலைக்கான பணமும் கிடைக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *