அட்டன்  யுலிபீல்ட் குருப் வெலிங்டன் பிரிவு தொழிலாளர்கள் தொடர் பணிப் பகிஷ்கரிப்பு

அட்டன்  யுலிபீல்ட் குருப் வெலிங்டன் பிரிவு (கவாளமலை தோட்டம்) தோட்டத்தின் ஆலய உற்சவத்துக்கு தோட்ட நிர்வாகம் எந்த உதவிகளையும் செய்ய முன் வராத காரணத்தினால் குறித்த பிரிவு தொழிலாளர்கள் கடந்த 14 ஆம் திகதியிலிருந்து தொடர் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் தெரிய வருவதாவது,

இத்தோட்டத்தின் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழா கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமானது. இவ் உற்சவத்துக்கு ஆலய பணிகளுக்கு மேலதிக வேலையாட்களை தோட்ட நிர்வாகம் தர மறுத்ததோடு சப்பரம் (தேர்) ஏற்றுவதற்கும் பறவைக் காவடி நிகழ்வுக்கும்  வாகன வசதியையும் வழங்கவில்லையென தோட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தேர் செல்லும் பாதையை செப்பனிடுவதற்கும் உதவிகள் செய்யாத அதேவேளை அன்னதானம் மற்றும் தீக்குழி போடுவதற்கு விறகுகளும் தரவில்லையென தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். தோட்ட இளைஞர்கள், ஆலய பரிபாலன சபையினர் மற்றும் தோட்டத் தலைவர்கள் கோரிக்கை விடுத்தும் மேற்படி உதவிகளை தோட்ட நிர்வாகம் மறுத்ததால் இந்த அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து கடந்த 14 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதுடன் அன்றைய தினம் தோட்ட காரியாலயத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றையும் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *