மட்டக்களப்பில் முன்பள்ளி சிறார்களின் ஓவிய கண்காட்சி

மட்டக்களப்பில் முன்பள்ளி சிறார்களினால் வரையப்பட்ட ஓவிய கண்காட்சியானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (24) இடம் பெற்றது.

கீளின் ஶ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ்  மாவட்டசெயலக  முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி பிரிவு மற்றும் கலாசார பிரிவும் ஒருங்கினணந்த ஏற்பாட்டில் இவ் நிகழ்வு இடம் பெற்றது முன்பள்ளி சிறார்களின் கற்பனை ஆக்கத்திறனை மேம்படுத்தும் முகமாக இந் நிகழ்வு புதிய மாவட்ட செயலக வளாகத்தில் இடம் பெற்றது .

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவின் திராய்மடு கிராம சேவகர்  பிரிவினுல் உள்ள ஐந்து முன்பள்ளி பாடசாலை சிறார்களின் ஓவியங்கள் காட்சி படுத்தப்பட்டதுடன் அரச சார்பற்ற நிறுவனங்களின் அனுசரனையில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு பரிசு பொருட்களும் சான்றிதழ்களும் அரசாங்க அதிபரினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது

நிகழ்வில் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் ,அனுசரனையாளர்கள் பெற்றோர்கள் முன்பள்றி ஆசிரியர்கள் என அதிகலவிலானவர்கள்  கலந்து கொன்டமை குறிப்பிடப்பிடதக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *