மாவட்டத்தில் விவசாயம், கால்நடை, கிராமிய அபிவிருத்தி மற்றும் பசளை வழங்கல் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் போது மாவட்டத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக விவசாயப்பணிப்பாளரினால் உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டப்பட்டன.
மேலும் மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட செயற்திட்ட விடயங்கள் தொடர்பாக அளிக்கை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வின் விவசாய கண்காணிப்பு உத்தியோகத்தர் சி. தனிநாயகம், கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.





