நிலையான விவசாயத்திற்கான டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் இரண்டாவது சர்வதேச மாநாடு யாழ் பல்கலைக்கழக விவசாய பீட கேட்போர் கூடத்தில் இன்றும்(22) நாளையும்(23) நடைபெறவுள்ளது.
இன்றைய முதல் நாள் ஆரம்ப நிகழ்வு யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீ சற்குணராஜா தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்புப் பேச்சாளராக பேராதனைப் பல்கலைக்கழக வேளாண்மை பொறியியல் துறைத் தலைவர் பேராசிரியர் தர்மசேன சூம் ஊடாக தனது கருத்துக்களை முன்வைத்தார்.
மின்னணுவியல் மற்றும் மின் பொறியியல் பேராசிரியர் குலிஸ்தான் ராஜா நிகழ்வில் கலந்து கொண்டு நிலையான விவசாயத்திற்கான டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் தொடர்பாக உரையாற்றிருந்தார்.
குறித்த மாநாட்டில் இந்தியா, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், யாழ் பல்கலைக்கழக பீடங்களின் பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஏனைய பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






