யாழ் நல்லூர் ஆலய முன்வீதியில் அனுமதியின்றி திறக்கப்பட்ட அசைவ உணவகத்தின் முன்னால் வைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற விளம்பரப்பலகை யாழ் மாநகரசபையினரால் அகற்றப்பட்டுள்ளது.
நல்லூரானது சைவ சமயத்தின் புனிதத் தலமாக கருதப்படுகின்ற நிலையில், தலத்துக்கு அருகிலே அசைவ உணவகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று முன்தினம்(20) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந் நிலையிலேயே குறித்த விளம்பரப்பலகை யாழ் மாநகரசபையினரால் அகற்றப்பட்டுள்ளது.