சிறுபோக செய்கைக்காக உரமானியமாக 190 மில்லியன் ரூபா வைப்பில் இடப்பட்டுள்ளது- அரசாங்கதிபர்

கிளிநொச்சி மாவட்டத்தில் 2025ம் ஆண்டு சிறுபோக செய்கைக்காக அரசாங்கத்தின் உரமானியமாக இதுவரை 6200 விவசாயிகளுக்கு 7600ஏக்கர் நிலப்பரப்புக்காக 190 மில்லியன் ரூபா வைப்பில் இடப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்கதிபர் எஸ். முரளிதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் சிறுபோக செய்கை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் 2025ம் ஆண்டு சிறுபோக செய்கையாக 10800ஹெக்டேயரில் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் போதிய மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளது. குளங்களில் போதுமான அளவு நீர் காணப்படுகின்றது. 2025 சிறுபோக செய்கைக்காக  உரமானியமாக இதுவரை 6200 விவசாயிகளுக்கு 7600 ஏக்கர் நிலப்பரப்புக்காக 190 மில்லியன் ரூபா வைப்பில் இடப்பட்டுள்ளது.

ஏனைய விவசாயிகளுக்கு அவர்களின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு கமநல சேவை நிலையங்கள் மூலம் முன்னெடுக்கப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *