மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதலாம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எஸ்.சசிகரன் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (25) ஆம் திகதி இடம் பெற்றது.
இதன் போது மாவட்டத்திற்கான கணக்காய்வு ஐய வினாக்கள் மற்றும் ஒதுக்கீடுகள் மற்றும் செலவினங்கள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் இக்காலாண்டிற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
மேலும் 2024 ஆண்டு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக தெளிவூட்டப்பட்டது.



