ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி போட்டி என அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், பட்டியல் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு
அட்டாளைச்சேனை றகுமானியபாத்தில் அமைந்துள்ள மக்கள் பணிமனையில் நடைபெற்ற நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றிய ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை உரையாற்றுகையில்,
அட்டாளைச்சேனை பிரதேசத்தின் அமைப்பாளராக கட்சி என்னை நியமித்துள்ளது என்றும் கட்சிக்கும் தலைமைக்கும், நமது மக்களுக்கும் விசுவாசமாக செயற்பட்டு கட்சிச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றேன்.
17 கிராம மட்ட கிளைத் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் இளைஞர் அமைப்பாளர்களோடு கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்கப்பட்டு எதிர்காலத்தில் செயற்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

