பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட வவுணதீவில் இரு பொலிசாரை கொலை செய்த சம்பத்தில் கைது செய்த ஸாரான் குழுவைச் சேர்ந்த 4 பேரையும் எதிர்வரும் யூன் 25 ஆஜராகமாறு நீதிமன்றம் உத்தரவு
பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட வவுணதீவின் இரு பொலிசாரை துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான ஸாகரான் குழுவைச் சேர்ந்த நான்கு பேரையும் எதிர்வரும் யூன் 25 ம் திகதி ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று திங்கட்கிழமை (24) உத்தரவிட்டார்.
2019 ஏப்பிரல் 21 உயிர்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான ஜ.எஸ்.ஜ.எஸ் சோந்த ஸாரானின் குழுவைச் சேர்ந்த கபூர் மாமா என அழைக்கப்படும் ஸாரானின் சாரதியான முகமது சர்ப் ஆதம்லெப்பை, மில்ஹான், பிறதோஸ். நில்காம் ஆகிய 4 பேரையும் சிஜடியினர் கைது செய்தனர்
இதனையடுத்து 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்குதாக்குதல் செய்தனர் இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று திங்கட்கிழமை விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் கொழும்பு சிஜடி ஸ்டடியில் இருந்துவரும் நான்கு பேரையும் மேல் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டனர்
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி இவர்களை எதிர்வரும் யூன் 25 ம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.

