சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற மூன்று கனரக வாகனங்கள் மீட்பு

சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற மூன்று கனரக வாகனங்களை நேற்று(24) பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளதுடன், அதன் சாரதிகளையும் கைது செய்துள்ளனர்.

அனுமதிப் பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த மூன்று கனரக வாகனங்களையும் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் வைத்து பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

அதனை அடுத்து அதன் சாரதிகளையும் பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று சாரதிகள் மற்றும் கைப்பற்றப்பட்டகனரக வாகனம் என்பவற்றை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கையளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *