ஓமந்தையில் கோர விபத்து; யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரின் கணவர் உயிரிழப்பு

இன்று(26) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றும் சஜ்யிதானந்த பிரபாகர குருக்கள் உயிரிழந்துள்ளார். (இவர் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரின் கணவருமாவார்). யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் . நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ் – கண்டி பிரதான வீதியில் வவுனியாவின் ஓமந்தை பகுதியில் இன்று அதிகாலை 4.40 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் உட்பட இருவர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

52 வயதுடைய  சஜ்யிதானந்த பிரபாகர குருக்கள் உயிரிழந்துள்ளதுடன், அவரின் மனைவி 50 வயதுடைய  பி. சீத்தாலட்சுமி, மகன் 27 வயதுடைய பி.அக்ஸய், மாமனார் 70 வயதுடைய சுவாமிநாதன் ஐயர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த காரானது யாழில் இருந்து ஓமந்தை நோக்கி பயணித்த டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா, ஓமந்தை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *