கிளிநொச்சியில் இலை மடிச்சுக்கட்டியின் தாக்கம் இனம் காணப்பட்டுள்ளது

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக செய்கையில் இலை மடிச்சுக்கட்டியின் தாக்கம் சில பகுதிகளில் இனம் காணப்பட்டுள்ளது.

 

விவசாயிகள் விவசாய திணைக்களத்தின் அறிவுறுத்தலைப் பின்பற்றி ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் சோதிலட்சுமி விஜயராசா தெரிவித்தார்.

 

கிளிநொச்சி அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் 10800ஹெக்டேயர் அளவில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இலை மடிச்சுக்கட்டி நோயின் தாக்கத்தை அவதானித்திருக்கிருக்கிறோம்.

 

நெல் இலைகள் பச்சையம் அற்ற நிலையில் இலைசுருண்ட நிலையில் காணப்படும் அதனுள் புழு காணப்படும் அந்த புழுவானது  இலைகளை மடித்து அதனுள் சுமார் 300 வரையான முட்டைகள் இட்டு 3-5 நாட்களில் புழு வெளியேறும் அந்த புழுவானது இலைகளைச்சுருட்டி 16நாட்கள் வரை உயிர்வாழும் மஞ்சள், பச்சை நிறம் கலந்த புழுவாக காணப்படும்.

 

விவசாயிகள் வயல்களில் நிழல்களைத்தவிர்ப்பதோடு நைதரசன் உரப்பாவணையையும் குறைக்க வேண்டும்.

 

சிபார்சு செய்யப்பட்ட இரசாயனங்களைப் பயன்படுத்த வேண்டும் விவசாய போதனாசிரியர்களின் அறிவுரைகளை பின்பற்றி பொருத்தமான கிருமி நாசினியை விசுறுமாறு கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *