அர்ச்சுனாவின் அடாவடியால் வெளியேறினார் சிறீதரன்

இன்றைய தினம் (25) யாழ்ப்பாண மாவட்டத்தின் அரச செயலகத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் ஆரம்பம் ஆகியிருந்தது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனா இராமநாதனுக்கும் இளங்குமரனுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது.

இந் நிலையிலேயே இன்றைய ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஒரு கட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அரச ஊழியர்களை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர்.

அவரை அமைதிகாக்கும் படி அமைச்சர் சந்திரசேகர் கூறிய போதும் அவர் தொடர்சியாக விமர்சனங்களை முன்வைத்த காரணத்தினாலும், இயல்பு நிலையில் கலந்துரையாடலை மேற்கொள்ள முடியாத காரணத்தினால் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து வெளியேறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *