வடமாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தை தவிர்ந்த விவசாய திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தைச் சேர்ந்த ஒப்பந்த அடிப்படையில் பல வருட காலம் பணிபுரியும் ஊழியர்கள் கிளிநொச்சி இரணைமடு சந்தியிலுள்ள பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இறுதியாக 2014ம் ஆண்டு சில ஊழியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்ட போதும் ஏனையவர்களுக்கு இன்றுவரை நியமனம் வழங்கப்படவில்லை.
2014ம் ஆண்டு நியமனம் வழங்கும் போது சில ஊழியர்கள் 180 நாட்களுக்கு ஓரிரு நாட்கள் குறைவாக காணப்பட்ட ஊழியர்களும் பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாக நியமனம் இன்றி இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


