யாழ் போதனா வைத்தியசாலைக்கு 268 தாதிய உத்தியோகத்தர்கள் நியமனம்

இன்று(28) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக இரண்டு தாதிய பரிபாலர்களும் 268 தாதிய உத்தியோகத்தர்களும் நியமனம் பெற்று வந்துள்ளார்கள்.

தாதிய பதிபாலர்களுக்கான வெற்றிடங்கள் ஐந்து இருக்கின்ற போதும் இரண்டு நியமனங்களே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே சேவையில் உள்ள தாதிய உத்தியோகத்தர்களில் 168 பேர் வருடாந்த இடமாற்றம் பெற்று செல்ல உள்ளனர்.

புதிதாக வருகை தந்தவர்களில் சுமார் 60 பேர் தமிழ் மொழி சார்ந்தவர்களாகவும் ஏனைய அனைவரும் சகோதர மொழி பேசும் சிங்களவர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

யாழ் போதனா வைத்தியசாலைக்கு நியமனம் பெற்றுவந்த 268 புதிய தாதிய உத்தியோகத்தர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை தாதியர் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *