முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணக்குழு கைது செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டுள்ளன.
மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுரத்து வீதி சுற்றுவட்டத்தில் ஒன்றினைந்த சில இளைஞர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (25) இரவு 9.00 மணியளவில் வெடி கொழுத்தி கொண்டாடினர்.
முன்னாள் அமைச்சர் கைது விவகாரத்தையடுத்து மாவட்டத்தில் மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறிய நிலையில் சம்பவதினமான நேற்று மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுரத்து வீதி சுற்றுவட்டத்தில் வெடிகளை கொளுத்தி சந்தோசத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் அப் பகுதியில் உள்ள மக்கள் வெடி சத்தத்தினால் அதிர்ந்ததையடுத்து மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

