வேட்புமனு நிராகரிப்பு : வழக்கு தாக்கல் செய்த தமிழ் மக்கள் கூட்டணி

யாழ்ப்பாண மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் தமிழ் மக்கள் கூட்டணி வழக்கு தொடர்ந்துள்ளது.

வேட்பு மனுவில் பெண் வேட்பாளர் ஒருவரை பட்டியலில் இருந்து நீக்கியமையால் தேவையான பெண் பிரதிநிதித்துவம் இல்லை என மாநகர சபைக்கான வேட்பு மனுவை தேர்தல்கள் திணைக்களம் முற்றாக நிராகரித்துள்ளது.

முழு வேட்பு மனுவையும் நிராகரித்து 48 வேட்பாளர்களின் ஜனநாயக உரிமையை மறுத்துள்ளார்கள் என தமிழ் மக்கள் கூட்டணியினர் கண்டனம் தெரிவித்தனர்.

இந் நிலையில்,

யாழ்ப்பாண மாநகர சபையில் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி (மணிவண்ணன்) முதல்வர் வேட்பாளராக  களமிறங்கிய தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பு மனுவே நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *