யாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுன்னாகம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 60 கிராம் கஞ்சா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை  மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *