நடந்துமுடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ் மாநகரசபைத் தேர்தலில் பட்டியல் வேட்பாளராக இடம்பெற்ற சகோதரி பாத்திமா றிஸ்லா ஆசிரியையை இலங்கை தமிழ் அரசுக் கட்சி தமது நியமன உறுப்பினராக நியமித்துள்ளது.
யாழ்ப்பாண மாநகர சபையில் தனக்குக் கிடைத்த 3 (போனஸ்) பிரதிநிதிகளில் ஒன்றை, யாழ் முஸ்லிம் சமூகம் சார்பில், றிபைன் பாத்திமா றிஸ்லாக்கு தமிழரசு கட்சி வழங்கியுள்ளது.

