காத்தான்குடி நகர சபையைக் கைப்பற்றியுள்ள உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி ஆகியவற்றின் ஊடாக காத்தான்குடி நகர சபையைக் கைப்பற்றியுள்ள உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வு, நேற்றிரவு(01) இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், கட்சியின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ .எம். ஹிஸ்புல்லாஹ், பிரதி தேசிய அமைப்பாளரும், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். எஸ் .உதுமாலெப்பை, முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நழீம், உலமாக்கள், உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ் எச். எம். அஸ்பர், பிரதி தவிசாளர் எம்.ஐ.எம். ஜெஸீம் ஆகியோர் உட்பட உறுப்பினர்கள் அனைவரும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *