செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் எழு மனித மண்டையோடுகள் அடையாளம்

அரியாலை – செம்மணி சித்துபாத்தி மயானத்தில் மனித உடலங்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்தக்கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவானிடம் விண்ணப்பத்தை முன் வைக்க சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செம்மணி – சித்துபாத்தி இந்து மயான பகுதியில் எழு மனித மண்டையோடு உள்ளிட்ட உடலங்களின் பாகங்கள் நேற்று வரை அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த பகுதியை யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா பார்வையிட்டார்.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த சட்டத்தரணி வீ.எஸ். நிரைஞ்சன், மூன்று மனித மண்டையோடுகளுக்கு மேல் ஒரு பகுதியில் அடையாளம் காணப்பட்டால் மனிதப் புதைகுழி என அதனை பிரகடனப்படுத்த முடியும் என்ற நிபந்தனைக்கமைய குறித்த பகுதியை மனிதப் புதைகுழியாக பிரகடனப்படுத்துமாறு கோரி யாழ்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவானிடம் விண்ணப்பத்தை முன் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *