மாவட்டத்தில் ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளை அமைத்து இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கான உயர் மட்ட கலந்துரையாடலே மேற்கொள்ளப்பட்டது.
மேலும் அமைக்கப்பட்டுவரும் தொழில் பேட்டைக்கு தேவையான மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கான சோலர் பனல் அமைத்தல் தொடர்பாகவும், குடிநீர் வழங்கல் தொடர்பாகவும் இதன் போது துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடப்பட்டது.
மற்றும் நீர் முகாமைத்துவம், தொலைத்தொடர்பாடலை மேம்படுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
எமது நாட்டுக்கு அதிகளவிலான அந்தியசெலவாணியை ஆடை உற்பத்தி மூலம் பெறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் ஜே.ஜே.மில்ஸ் குழுமத்தின் முகாமைத்து பணிப்பாளர் ஶ்ரீகுமார் பாலசூப்பிரமணியம், இலங்கை முதலீட்டுச் சபையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் எம்.கே.டி. லோரன்ஸ், சுகத் பரணவிதான, முதலீட்டாளர்கள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வீ. நவநீதன், துறை சார் நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



